Saturday, February 27, 2010

Meelad-Un-Nabi (Holy Prophet's Birth & Death Day) 2010

இன்று றபிய்யுல் அவ்வல் மாதம் பிறை 12ம் நாள் எமது இறுதித்தூதர் கண்மனி நாயகம் முகம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த மற்றும் ஜனன தினமுமாகும். இன்று காலை மஸ்ஜிதுல் கபீர் மத்ரசதுல் மஜ்மஉல் ஸஹாதத் ஐ சேர்ந்த மாணவ மாணவிகளால் இத்தினத்தை ஞாபகப்படுத்தும் முகமாக வீதி ஊர்வலமொன்று நடைபெற்றது. 


Friday, February 26, 2010

Marigold Cup -2009 (26.02.2010)

Marigold Cup - 2009, the grand final of this soccer tournament held today in  Mashoor Moulana play ground. The game was held between Maruthamunai Olympic Sports Club and Kalmunai Brilliant Sports Club. Olympic SC won the trophy by beating Brilliant SC at the score 1-0. The famous lawyer and the member of Municipal Council Kalmunai, Mr.Rakeeb LL.B was invited as the chief guest for this event. 

மரிகோல்ட் கிண்ணம் 2009 இறுதிப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை மசூர்  மௌலானா விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கல்முனை பிரில்லியன்ட் விளையாட்டுக் கழகம் போட்டி இட்டது. இப் போட்டியில் ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் 1-௦0 என்ற அடிப்படையில் கிண்ணத்தை சுவீகரித்தது. இப் போட்டியின் பிரதம அதிதியாக பிரபல  சட்டத்தரணியும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஜனாப்.ரகீப்LL.B அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறுப்பிடத்தக்கது. 


Here are some live Pictures :

Wednesday, February 24, 2010

Personal

"மருதூர்க்கனி" - முஹம்மது ஹனிபா


மருதமுனை மண்ணின் மணம் பரப்ப பிறந்த மண்ணின் மைந்தர்களில்,  மக்களின் மனதில் என்றும் அழியா இடம் பிடித்து அரியணையில் அமர்ந்திருக்கும், ‘மக்கள் கவி’ மருதூர்க்கனி 1942ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி உதுமாலெப்பை சுலைஹா உம்மா தம்பதியாரின் ஏழு குழந்தைகளில் தலைமகனாகப்பிறந்தார். இவரின் இயற்பெயர் முஹம்மது ஹனிபா. இளவயது முதலே துடிப்பும், சுதந்திர உணர்வும் அவரிடம் நிறைந்து காணப்பட்டது. கண்முன் நடக்கும் கொடுமைகளைக் கண்டு, கொதித்தெழுவதும், அதன் பலனாய் தண்டணைகள் பெறுவதும் அவருக்கு சர்வசாதாரணமாய் அமைந்திருந்தது. தனது ஆரம்பக்கல்வியை ஆங்கில மொழியிலேயே தொடங்கிய போதும் தமிழ்மேல் அவருக்கிருந்த பற்றுதலினால் பள்ளிப்படிப்பை தமிழிலேயே SSC வரை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் பயின்றார். அதன் பலனாய் 18வது வயதிலேயே அவருக்கு ஆசிரியர் பதவியும் கிடைத்தது. பின் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் இரண்டு வருடங்கள் ஆசிரியர் பயிற்சியை பெற்றார்.



தனது செயல்கள், சிந்தனைகள் ஒவ்வொன்றுமே இனி வரும் தலைமுறையினருக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்தார். காதலித்து திருமணம் முடித்துக்கொண்டார். ஆனாலும் நமது இளைஞர்கள் போல் பொன் கொண்ட பெண் வேண்டி காத்திருக்கவில்லை. ஒரு சாதாரண குடும்ப பெண்ணான காமிலாவை கைக்கூலியின்றி 1968ம் ஆண்டு கைப்பிடித்தார். அப்போது முதுசமாகவும் அவரிடம் எதுவும் இருக்கவுமில்லை. வாழ்வை அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்தார். அதனாலேயே என்னவோ அவரின் உணர்வுகள் அடிமட்ட ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களுக்காகவே கொதித்தது. ‘ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்பார்கள் ஆனாலும் நான்கு பெண்பிள்ளைகளைப் பெற்று, அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, அவர்கள் தலைநிமிர்ந்து வாழ வழிகாட்டி, அவரும் அரசனாகவே வாழ்ந்து காட்டினார்.


இன்றைய தலைமுறையினருக்கு அவரை ஒரு சிறந்த எழுதாளனாகவும் அரசியல்சித்தாந்தகராகவும் மட்டுமே தெரிந்திருக்கும். நல்ல கல்வியை போதித்த நல்லாசானாக, நலிந்தவர்களுக்காக போராடிய தொழிற்சங்கவாதியாக, கொந்தளிக்கும் கடலிலே வலையோடு சென்று மீன் பிடித்து வந்த மீனவனாக, மருதமுனை நெசவை வடக்கு வரை எடுத்துச்சென்று வாழ்வு நடத்திய தொழிலாளியாக, நாட்டு நடப்புக்களை தைரியமாக  பக்கச்சார்பின்றி  பத்திரிகைக்கு எழுதிய நிருபராக, புகைப்படக்கலைஞனாக அவர் வாழ்ந்திருக்கின்றார்.

இவரின் முதற்கவிதை ‘நினைவு ’ம் ஒரு காதல் கவிதைதான். மே 63இல் பிரசுரமானது. அனேகமான எழுத்தாளர்கள் ஒன்று கவிதையையோ அல்லது கதையையோ எழுதுவதில் விற்பண்ணர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவை இரண்டையும் அழகாக எழுதுவது மருதூர்க்கனியின் தனிச்சிறப்பு. 1965ஆம் ஆண்டு இவர் எழுதிய முதற்கதை ‘பசி’ க்கு ‘செய்தி’ப் பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் முதலிடம் கிடைத்தது. கதை, கவிதையுடன் மட்டுமல்ல அவர் நாடகம் இயற்றுவதிலும், நடிப்பதிலும் கூட தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவரது ‘சோழன் மகன்’ கவிதை நாடகம் அகில இலங்கைக்கான போட்டியில் சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இவரது எழுத்து ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் எதிராகவே எப்பொழுதும் குரல் கொடுத்து வந்துள்ளது. மக்கள் எப்பொழுதும் சுதந்திரக் காற்றையே சுவாசிக்க வேண்டும் என விரும்பினார். முற்போக்கு சிந்தனையுடைய இவர் வர்க்கபேதமற்ற வாழ்விலேயே ஒடுக்கு முறைகளும், சுரண்டல்களும் இல்லாதொழியும் எனவும் நம்பினார். எதைக்கண்டு அவர் மனம் வெந்து அதைக் கதைகளாகவும் கவிதைகளாகவும் எழுதினாரோ அது இன்றும் இன்னமும் அப்படியே இருக்கிறது. வர்க்கமுரண்பாடு வழிவழியாகத் தொடர்ந்துகொண்டே வருகிறது. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வாழுகின்ற இந்த சமுதாயத்தை தன் எழுத்துக்களால் விழிக்கச் செய்யலாம் என நினைத்தார். உறங்குபவனை எழுப்பி விடலாம், உறங்குவது போல் பாசாங்கு செய்பவனை எவ்வாறு எழுப்புவது? இவரது கவிதைகளும், கதைகளும் வெறுமனே பொழுது போக்கிற்காக வாசித்துவிட்டு, தூக்கிப்போட்டு விட்டு செல்லக்கூடிய ஒன்றல்ல. ஒவ்வொன்றும் ஒவ்வோர் படிப்பினை. அவற்றைப் படிக்கும் போதே, படிப்பவர் உள்ளமும் அநீதிகைளைக் கண்டு கிளர்ந்தெழத் துடிப்பதை, அவர் எழுத்துக்களை படித்த வாசகர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 


ஒரு மனிதன் தனக்குப் பின் தன் பெயர் சொல்ல ஒரு ஆண்மகனைப் பெற்றிருக்க வேண்டும் இல்லை எனில் ஒரு புத்தகமாவது வெளியிட்டிருக்க வேண்டும் எனக் கூறுவார்கள். மருதூர்க்கனி 5 புத்தகங்களை எழுத்துருவில் கொண்டு வந்தார், ஆனாலும் அவற்றில் இரண்டான ‘மண்பூனைகளும் எலி பிடிக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதியும், ‘அந்த மழைநாட்களுக்காக’ என்ற கவிதைத்தொகுதியுமே அவர் கண்ணோடு 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மற்றைய ‘என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்’, ‘சந்தனப்பாட்டகமும் கிலாபத்துக்கப்பலும்’, ‘மருதூர்க்கனி கவிதைகள்’ ஆகிய மூன்றும் பிரசுரத்திற்காய் காத்துக்கிடக்கின்றன. இவரின் கலைச்சேவைக்காய் 2004ம் ஆண்டு ‘கலாபூஷணம்’ விருது வழங்கப்பட்டது.

வளரிளம் பருவம் தொட்டே வர்க்கமுரண்பாடுகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் மக்கள் நலன் கருதியே அரசியலிலும் களமிறங்கினார். முற்போக்கு சிந்தனையுடைய இவர் ஆரம்பத்தில் ஒரு இடதுசாரியாகவே போராடினார். முஸ்லிம்கள் ஒரு தனி சமூகம், அவர்களின் பிரச்சனைகள், உரிமைகள் என்பவற்றிற்காக நடுநிலையாக நின்று சிந்தித்து செயற்படவென ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ ஐ மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் இணைந்து 1981ம் ஆண்டு ஒரு இயக்கமாக உருவாக்கினார். பின் 1988ம் ஆண்டே அது அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இடைப்பட்ட காலத்தில் மக்களுக்காக, இவர்கள் பாடுபட்டதும், அவர்கள் இவர்களை தூக்கியெறிந்ததும், பின் ஏற்றுக்கொண்டதும் வரலாறு. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் தோள்கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இனவாத  வெயிலிலிருந்து மக்களைக் காக்க ஒரு விருட்சத்தை முளையிலிருந்து வளர்த்தார்கள். அது பூத்துக் காய்த்து குலுங்கும் போது தலைவர் அவர்கள் இறையடி சேர்ந்தார். அதன்பின் இவர் கண் முன்னேயே அது சூறையாடப்பட்டு, தறித்து துண்டு துண்டாக்கப்பட்டதை கண்டு மனம் நொந்து நடைபிணமானார்.




1989ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் புலிகளின் பலத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தேர்தலில் போட்டியிடாமல் ஒழித்தோடிய பலரிற்கு நடுவிலும் உயிரைப் பணயம் வைத்து, போட்டியிட்டார். இருந்த போதும் மருதமுனை மக்கள் இவரை நிராகாரித்தனர். பின் தனது மண், தனது மக்கள் என அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே 2000ம் ஆண்டு தேசியபட்டியலில் பாராளுமன்றத்திற்கு சென்றார். மருதமுனையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையும் இவரையே சாரும். தன் மக்களுக்கு சேவை செய்யக் கிடைத்ததோ ஒரே ஒரு வருடம் தான். இருப்பினும் தன்னால் முடிந்த வரை வேலை வாய்ப்புக்ககளையும், அபிவிருத்திகளையும் செய்துள்ளார். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை வசீகரிக்கும் மருதனையின் அழகிய கடற்கரை இரவு வேளைகளில் இருளில் மூழ்கிக் கிடந்ததைக்கண்டு, கடற்கரை நெடுகிலும் வீதி விளக்குகளையும், மக்கள் இளைப்பாற கருங்கல் வாங்குகளையும் அமைத்துக் கொடுத்தார். தமது கிராமத்திற்கென்று ஒரு சிறு மகப்பேற்று மருத்துவமனையாவது வேண்டுமென்று அதனையும் அமைத்துக் கொடுத்தார். ஆனால் இவையிரண்டுமே இப்போது எம்மால் காணக்கிடைக்காது. ஏனெனில் அவற்றையெல்லாம் 2004ம் ஆண்டு வந்து சென்ற சுனாமி விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. இது காலத்தின் கொடுமை. மருதமுனை நூலகசாலைக்கு இருந்த கட்டிட பற்றாக்குறையையும், புதிய கட்டிடங்களை அமைக்க உதவி நிவர்த்தி செய்தார். இவரின் மக்கள் சேவைகளைக் கௌரவிக்கும் முகமாக 1998ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் ‘இலங்காதிலக’ விருது வழங்கப்பட்டது.

எழுத்தே இவரின் உயிர் மூச்சாய் இருந்தது. ஆரம்பத்தில் சுரண்டப்பட்ட மக்களுக்காக கதைகளும் கவிதைகளும் எழுதியவர், மக்களின் நலன் கருதி அரசியலில் இணைந்த பின்னும் தனது எழுத்துக்களை அரசியல் போராட்டத்திற்காக பயன்படுத்தினார். நாள்தோறும் இவரது அறிக்கை இல்லாமல் தமிழ் பத்திரிகை பிரசுரமாவதே அரிது. அவர் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ சார்பாக பத்திரிகை ஒன்றை நடாத்தி வந்தார். இதன் பயனாக 1989ம் ஆண்டு புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார். பின் 1990ம் ஆண்டு ஆயுதக் குழுவொன்று அவர் வீட்டினுள் இரவு வேளையில் நுழைந்து ஆயுதமுனையில் நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றது. அத்துடன் இவரின் பிள்ளைகளின் பள்ளிப்படிப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனால் இவரும், சிறிது காலத்தின் பின் அன்னாரின் குடும்பமும் கொழும்பை நோக்கி பாதுகாப்புத் தேடி ஓடியது.

“எப்போதோ எழுதப்பட்ட மார்க்சிம் கோர்க்கியின் ‘தாய்’ இப்போதும் மூன்றாம் உலக நாட்டுத்தொழிலாளர்களின் பாடப்புத்தகமாக இருப்பது போல, எனது சில கதைகளாவது முற்போக்கு உதாரண எழுத்தாய் நின்று நிலைபெறும் என்று, தன்னடக்கத்தோடு நான் நம்புகிறேன்.” என தனது சிறுகதைதொகுதியின் முன்னுரையிலே அன்று மருதூர்க்கனி கூறிச்சென்றது, இன்று நிஜமாகியுள்ளது. ஆம், 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தப்பட்ட புதிய பாடத்திற்கான தரம் 11 இன் ‘தமிழ்மொழியும் இலக்கியமும்’ பாடப்புத்தகத்திலே 'மண்பூனைகளும் எலிபிடிக்கும்’ எனும் சிறுகதை பிரசுரமாகி அவரின் கனவொன்று நனவாகியுள்ளது.


இறுதி வரை மக்கள் நலன்விரும்பியாகவே வாழ்ந்தார். 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் திகதி இறையடி சேர்ந்தார். 
இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜிஊன்.  

(Source: மருதூர்க்கனி அவர்களின் புதல்விகள்)








Friday, February 19, 2010

Dengue Disease Awareness Program; டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுப்பு (14.02.2010)


An awareness program titled "Dengue Disease Awareness and Keep Our Environment Clean" was conducted in Maruthamunai last Sunday.  'People Hands' organized this program with the sponsorship of Divisional Health Office, Kalmunai Municipal Council, Hatton National Bank.
This program was undertaken in various area in Maruthamunai including Makbooliyapuram, France City, Akbar Village. 

The Chairman of ‘Peoples Hands’ Mr. Nowzad and The Consultant Mr.MIA. Jabbar were the key role in organizing this awareness program. The upper Level students of Al-Manar Central College, Shams Central College, Al-Hambra Vidyalaya and Pulavarmani Sharifudeen Vidlayala were also attended.

Mr. MIA. Jabbar said that three individuals from Maruthamunai were identified as patients infected by dengue virus and further he narrated that ‘Peoples Hands’ was putting their effort to reduce the affects caused by the dengue virus.

 
‘மக்கள் கரங்கள்' அமைப்பு கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமணை, மாநகரசபை, ஹற்றன் நெஷனல் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து நடைமுறைப்படுத்திய “டெங்கு நோய் விழிப்புணர்வும், சூழல் சத்திகரிப்பு நிகழ்வும்” கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதமுனையில் நடைபெற்றது.
 
மருதமுனை மக்பூலியாபுரம், பிரான்ஸ்சிற்றி, அக்பர் கிராமம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படடிருந்தன. சில இடங்களில் காணப்பட்ட நோய்க்காவிகளும் அழிக்கப்பட்டன.
 
‘மக்கள் கரங்கள்’ அமைப்பின் பணிப்பளர் நௌஷாட் அபூபக்கர், நிபுணத்துவ ஆலோசகர் M.I.A.  ஜப்பர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தில் அல் - மனார் மத்திய கல்லூரி, ஷம்ஸ் மத்திய கல்லூரி, அல் - ஹம்றா வித்தியாலயம், புலவர் மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம் ஆகியவற்றின் உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களும் பங்கெடுத்துக்கொண்டனர்.
 
மருதமுனை நூறானியா வீதி, சமுர்த்தி வீதி, ஹாஜியார் வீதி ஆகிய சுற்றுப்புறச் சூழலில் மூன்று டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் இதனை இது இன்னும் பரவக்கூடிய வாய்ப்புள்ளது எனவும் இதனைக் கட்டுப்படுத்தவே தாங்கள் இவ்வாறான வேலைத்திட்ட ங்களை முன்னெடுத்துள்ளன என அமைப்பின் ஆலோசகர் M.I.A. ஜப்பார் தெரிவித்தார்.



Monday, February 15, 2010

Introducing the Logo of Maruthamunai Online



Maruthamunai Online has reached it's another mile stone within a couple of months. It introduces it's logo ensuring the heritage and the culture of Maruthamunai. Maruthamunai Online Team thanks Mr.M.N.M.Rayees who helped a lot in computerising the logo. 

Maruthamunai Online, அதன் அடுத்த மைல் கல்லை அடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. எமது சமூகத்திடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளையும் வரவேற்பையும் கருத்திற் கொண்டு Maruthamunai Online மருதமுனையின் புராதனத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அதற்கென ஒரு இலட்சினையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை கணணி வடிவமைப்பு செய்வதில் உதவிய M.N.M. றயீஸ் அவர்களுக்கு Maruthamunai Online மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.



Sunday, February 7, 2010

Felicitation Ceremony for Principal Mr.S.L.A.Raheem (07.02.2009)

There was a felicitation ceremony organized by Al Manar Central College, Maruthamunai for Mr. S.L.A.Raheem who was the Previous Principal of Al Manar Central College, recently. The image below shows Mr. MCM.Abobakkar (The Senior Teacher of the college) honouring the principal with golden shawl,   Mr. MTA.Nizam (Director of Education), Mrs. SK.Anantharaja (Additional Director of Education ), Mr.MS.Abdul Jaleel (Deputy Director of Education) and teachers surrounded them.
(Source : Virakesari- 06.02.2010, Translated By: Maruthamunai Online Team)

 மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் நீண்ட காலம் கடமையாற்றி இடம் மாற்றம் பெற்றுச்சென்ற அதிபர் S.L.A. றஹீமை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அதன் போது அதிபரை கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர் M.C.M. அபூபக்கர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதைவும் வலயக்கல்விப் பணிப்பாளர் M.T.A. நிஸாம், மேலதிக வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி S.K. ஆனந்தராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் M.S. அப்துல் ஜலீல் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.

 


Saturday, February 6, 2010

KALAIKKATHIR - 2010 கலைக்கதிர் - 2010 (05.02.2010)

There was a Cultural Programme  "KALAIKKATHIR - 2010" organized by Shams Central College, Maruthamunai. The primary section students expressed their talent on this show. The event was presided by the college principal Mr. SLM. Jalaludeen. The chief guest was HON. ML. Thulkar Naheem , LLB(Member of Eastern Provincial council) , and the guest of honours were Mr. MS. Abdul Jaleel (Deputy Director of Education ), Al-Haj. HMA. Wadood (Divisional Eduation Officer),  Al-Haj. ZM. Natheer (Assistant Director of Education ) and Al-Haj. AL. Sakaaf (Assistant Director of Education ). 

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி "கலைக்கதிர் - 2010" எனும் ஒரு கலாச்சார நிகழ்வை மருதமுனை மக்கள் மண்டபத்தில் நேற்று மிகவும் கோலாகலமாக நடத்தியது. கல்லூரியின் அதிபர் Mr. SLM. ஜலாலுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்கள் கலந்து தமது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் HON. ML. துல்கர் நயீம் அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர் Mr. MS. அப்துல் ஜலீல், பிரதேச கல்வி உத்தியோகத்தர் Al-Haj. HMA. வதூத்,  உதவி கல்வி பணிப்பாளர் Al-Haj. ZM. நதீர் உதவி கல்வி பணிப்பாளர் Al-Haj. AL. சக்காப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
From the event.....