Wednesday, March 17, 2010

Foot Ball Tournament (17.03.2010)

The Foot Ball Tournament among the Sports Clubs in the Kalmunai Muslim Division was started in Masoor Moulana Ground yesterday.
The Chief Guest of the event was Mr. MM. Naufal (DS Kalmunai Muslim Division). Also Mr. M.A. Jamal Mohamed (Vice President - ADFA), A.M. Ibrahim (General Secretary - ADFA), A.l. Gani (Secretary Ampara District Referee Association) and M.I.M. Ameer Ali (Sports Coordinator – Ampara District) A.M.M. Raseen (Divisional Sports Coordinator) were participated.
07 teams are participating in this Tournament, and the 1st match was between Maruthamunai Eastern Youth Sports Club and Maruthamunai Gold Mind Sports Club. Maruthamunai Gold Mind Sports Club won the match by Penalty Kick.
Mr. A.M.M. Raseen (Divisional Sports Coordinator) said “other matches in this tournament will held on coming 17, 18, 23, and 24 of this Month. The final match will held on coming 29th of this Month”.


கல்முனை முஸ்லீம் பிரதேச செயலக விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நேற்று மாலை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
கல்முனை பிரதேச செயலாளர் M.M. நௌபல் பிரதம அதிதியாக பலந்து கொண்டு சுற்றுப்போட்டியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் M.A. ஜமால் முகம்மது, பொதுச்செயலாளர் A.M. இப்றாஹீம், அம்பாரை மாவட்ட மத்தியஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் A.L.  கனி, அம்பாரை மாவட்ட விளையாட்டதிகாரி M.I.M. அமீர் அலி பிரதேச விளையாட்டதிகாரி A.M.M. றசீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
07 கழகங்கள் பங்கு கொள்ளும் இச்சுற்றுப்போட்டியின் 1வது போட்டியில் மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட்டுக்கழகமும் ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகமும் பங்கு பற்றின.
போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று 2 ற்கு 2 என்ற கோல் அடிப்படையில் சமநிலையானதையடுத்து தண்டனை உதை மூலம் 5 ற்கு 4 என்ற கோல் அடிப்படையில் கோல்ட்மைன்ட் விளையாட்டுக்கழகமும் வெற்றி பெற்றது.
ஏனைய போட்டிகள் இம்மாதம் 17ம், 18ம், 23ம், 24ம் திகதிகளில் நடைபெறும். இறுதிப்போட்டி 29ம் திகதி நடைபெறவுள்ளதாக பிரதேச விளையாட்டதிகாரி A.M.M. றசீன் தெரிவித்தார்

Here are some live pictures :


(Source : PMMA. Cader - Journalist)

No comments:

Post a Comment